CURRENT DASA BUKTHI PREDICTIONS

  • Home    >
  • CURRENT DASA BUKTHI PREDICTIONS
blog_img

நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்(Current Dasa Bukthi Predictions)

நடக்கும் திசை உயிர்பற்றான திசையா அல்லது பொருள்பற்றான திசையா என்பதை முதலில் நாம் தெறிந்துகொள்வது நல்லதுஆகும்.

உயிர்பற்று என்றால் என்ன?


நடக்கும் திசை-1,3,5,7,9,11 இந்தபாவகத்தில் செல்வது பொருள்பற்று என்றால் என்ன?


நடக்கும்திசை-2,4,6,8,10,12 இந்தபாவகத்தில் செல்வது

உயிர்பற்றான திசை நல்லஆரோக்கியம்,திருமணம் ஆகதவர்க்கு திருமணத்தை நடத்திகொடுக்கும், குழந்தைபாக்கியம்,நல்லகல்வி, உயர்கல்வியில்சிறந்து விளங்குதல், அனைவரிடத்திலும் அன்பாக இருத்தல். ஆனால் பொருளாதாரம் சிறப்பைதராது. வேலைவாய்ப்பு சிறப்பை தராது. தொழில்சிறப்பை தராது.

பொருள் பற்றுடைய திசை தனநிலை பெருக்கம்,வீடுநிலம்,வாகனம், வேலை வாய்ப்பு, தொழில் இவைகள் சிறப்பாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கோ கணவன் - மணைவி ஒற்றுமைக்கோ சிறப்பை தராது,சொந்தம் பந்தம் சோர்க்கை சிறப்பை தராது.

இப்படி திசைகள் இருக்கும் பட்சத்தில் நாம் புதிய முயற்ச்சிகள் எடுக்கும் போது நடக்கும் திசை எவ்வாறு உள்ளது,திசைக்குள் வரும் புத்திகள் எவ்வாறு உள்ளது என்று தெறிந்துகொன்டு நடக்கும்திசைக்கேற்ப நாம் பயணித்தால் பெரிய இழப்புகள் இன்றி நாம் தப்பித்துகொள்ளலாம்.

உதாரணம் :ஒருவர் ஒரு புதிய தொழில் தொடங்காலம் என்று நினைக்கிறார் நடக்கும் திசை குரு என வைத்துகொள்வோம் குரு 16வருடங்கள் நடக்க கூடியது ஆகும். இந்த 16வருடங்கள் திசை சிறப்பாக உள்ளது என்றால் நாம் தொழலை ஆரம்பிக்கலாம் 16வருடகுருதிசையில் வரும் புத்திகள் தொழிலுக்கு தடையில்லாத புத்திகள் இருப்பின் அந்த திசையில் நன்கு வளர்ச்சியில் இருப்பார்கள். அதற்கு மாறாக இடையில் ஒன்று அல்லது இரண்டுபுத்திகள் சிறப்பில்லை என்றால் அந்தகாலம் புதிய முயற்ச்சி எடுக்காமலும், தொழிலை கவனத்துடன் பார்த்துகொள்வது சிறப்பு.நாம் நல்ல நிலைக்கோ கெட்டநிலைக்கோ தற்காலிக நிலைக்கோ சிக்கல்கள் அடைவது நடக்கும் திசை புத்திகள் ஆகும். நாம் ஜாதகத்தில் அடிக்கடி தெறிந்து கொள்வது திசை புத்திகள்ஆகும்.