ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
மிதுன ராசியின் உருவம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும். அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்து இருப்பதை பெரிதும் விரும்புவார்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள். தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாளர் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.
!!! வாழ்க வளமுடன்!!!