RASI URUVAM

  •    > Details
  • ரிஷப ராசியின் உருவம்


    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
                         ரிஷப ராசி
    ரிஷப ராசியின் உருவம் ஆடு ஆகும்.  மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம்  அதாவது நமக்கு பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். இதனால் ரிஷப ராசியினர் பிறருக்கு கீழ்ப்படிந்து நடப்பார் என்றும், நல்ல உழைப்பாளிகள் எனக் கூறப்படுகிறது.  மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கி விட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக் கொள்ளாது. உதாரணத்திற்கு செக்கு மாடுகளை கூறலாம். இதனால் ரிஷப ராசிகினர் மாற்றங்களை விரும்பாதவர்  எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனப்பெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப் போல் எந்த பருவ காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடலுறவு காட்சிகளை காணலாம். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக் கூறப்படுகிறது.
    !!! வாழ்க வளமுடன்!!!