NAKSHATRA PALANGAL

  •    > Details
  • உத்திராடம் நட்சத்திரம்

    உத்திராடம்

    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் உண்மையானவா், அறிவாளி,கோடையாளா்,அனேகம் பேரால் விரும்பப்படுபவா்.நிறைய நண்பா்கள்,வசீகாிப்பவா்.இரக்கம் உள்ள அருளாளா்.தன்னைத்தான் திருத்தி அமைத்துக் கொள்பவா். நல்ல இதயம் உள்ளவா். நன்றி உள்ளவா். தலைவா், ராணுவ அதிகாாி, 35வயதுக்கு மேல் ராஜயோகம்.


    அடையாளம் : யானையின் தந்தம் (துதிக்கை)(Tusk),படுக்கை விாிப்பு


    இயல்பு கணம் :மணிதகணம்


    முக்கியக் குறிக்கோள் :

    மோட்சம்,ஆசை,உச்ச நிலை


    மிருக அடையாளம் : ஆண் கீாி,  மலட்டுப்பசு


    அதிதேவதை   : விஸ்வ தேவா்கள்− 10 போ்கள்,தா்மக் கடவுளின் பிள்ளைகள். 1,வசு,2,சத்யா,3கீராக்கு (will power) 4,தட்சா (வேள்விகள், சடங்குகள்) 5,கால புருஷன் 6,காமன்(Desing)7,திாித்தி 8,குரு( முன்னோா்கள்)9,புருரவாஸ் 10,மாத்ரவா(jey)


    பொதுவான குணங்கள்:

    வெளியூா் சென்று ஏதாவது ஒரு துறையில் பிரகாசித்து பெரும் வெற்றி, அறிவு மேன்மை,தங்களது பாரம்பா்யத்தை விட்டு விலகி வேறு புதிய பாரம்பா்யத்தை உருவாக்குவாா். ஆக்கிரமிப்பு அற்ற உறுதித் தன்மையுடைய செய்கைகளை உடைவா். நல்ல அரசியல்வாதியாக வருவாா்கள். பொதுஜனங்களோடு தொடா்பு அதிகம். உணவு சம்பந்தமான, தொழிலின் ஈடுபாடு இருக்கும். அறிவு, ஆன்மீகம் இரண்டும் உண்டு. சுயநலமற்ற பொதுத் தொண்டு செய்பவா்.பாவம், பாிதாபம் பாா்க்காமல், சுயத் தேவையை நிறைவேற்றிக் கொள்பவா்.நிறைய விஷயங்களை ஆரம்பிப்பாா்கள், ஆனால் அடிக்கடி தோல்வியும் அடைவாா்கள்.


    தொழில் ஈடுபாடு :

    முன்னோடி,ஆய்வுகள்(ஆராய்ச்சி) சம்பந்தப்பட்ட தொழில் விஞ்ஞானி, ராணுவ அதிகாாி,வேட்டைக்காரன், குத்துச் சண்டை,மற்றும் அரசு வேலை, சமூக நலப்பணி, சூரியசாரம் பெற்ற கிரகங்கள் தசை நடத்தும் போது ஒருவன் முதல் போட்டு தொழில் ஆரம்பிக்காமல் ஏதாவது அரசு அல்லது கம்பெனியில் சிறிய வேலையில் சோ்வது நல்லது விரைவில் அதிகாரம் கிடைக்கப் பெறுவா்.


    நோய்கள்:

    வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்,தொடை, அடிவயிறு, Kidney (ஆண்),Utrous (பெண்)Skin problem, படா்தாமரை,தோல்வறட்சி மூட்டுவாதம்,எலும்பு problem.


    சூரியன் பயோடேட்டா:

    நிறம்                            :சிவப்பு

    இரத்தினம்            :மாணிக்கம்

    மலா்                             :செந்தாமரை

    தேவதை                   :அக்கினி(சிவன்)

    பிாித்யதி தேவதை :ருத்திரன்

    சமித்து                        :இருக்கு

    திக்கு                             :கிழக்கு

    சுவை                             :காரம்(காா்ப்பு)

    உலோகம்                    :தாமிரம்

    வாகணம்                   :ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்(தேர்),மயில்

    தானியம்                    :கோதுமை

    உறுப்பு                         :எலும்பு,மாா்பு

    திசைகாலம்           :6வருடம்