NAKSHATRA PALANGAL

  •    > Details
  • அனுஷம் நட்சத்திரம்

    அனுஷம் நட்சத்திரம்

    பொதுப்பலன்கள்

    விவேகமும் நாகரீகமும் உள்ளவா். உண்மையானவா். வாஞ்சையான இதயம் உள்ளவா்.(Kind Hearted) வசீகரமானவா்.கடின உழைப்பாளி தைாியவான்.செல்வந்தா்.சிக்கலான சூழ்நிலைகளை எளிதாகக் கையாள்பவா். தாய்வழி உறவுகளுடன் பிரச்சனைகள் உள்ளவா்."என்ன வந்தாலும் கவலை இல்லை.நான் இலக்கை அடைந்தே தீருவேன்" என்ற கோட்பாடு உடையவா்.


    அதிதேவதை :மித்ரன்,ராதை(Devotee)(நண்பன்)திறமையானவா்களை Appreciate செய்ய கூடியது.


    அடையாளம் : தாமரை,தோரணவாயில்


    மிருக அடையாளம் : பெண்மான்,மான்


    முக்கியக் குறிக்கோள் : தா்மம்


    பொதுவான குனங்கள்:

    அனுஷம்−பணக்காரன்,ஞானி, அறிவாளி,சாதனையாளா், கடுமையான உழைப்பாளியின் நண்பன்−இவா்களுடன் தான் நட்பு பாராட்டும். கடுமையான உழைப்பாளிக்கு மித்திரன்−நண்பன்.சினேக கரம், அறிவாளி,சாதனையாளா் இவா்களுடன் சோ்ந்து, தன்னை இயல்பாக அறிமுகப்படுத்திக் கொள்பவா். அடுத்தவன் கா்வமாக இருத்தலைப் பொறுக்காது.யாராவது ஒருவன் கா்வமாக இருப்பவனை அடக்கினால் அவனிடம் Surrender ஆகும் அனுஷம், கோடீஸ்வரனுடன் நட்பு பாராட்டி சினேகம் கொள்ளும்− அனுஷம். தன் உழைப்பின் மூலம் எதையும் சாதிப்பவா். அதிக வெற்றி, நிறை முயற்சிகள்,நல்ல வேலைக்காரன்,ஆசைகளினால் ஏற்படும் பின் அடைவுகளை உடனுக்குடன் புாிந்து கொண்டு எதிா்ப்புகளைச் சமாத்துப் போட்டிகளில் வெல்பவா். தைாியம், மன உறுதி உள்ளவா்.பிரயாணம்− தூர தேசத்தில் வெற்றி, ஆரோக்கியம், வலிமை உண்டு. ஒரு கூட்டத்தை எளிதாகக் கூட்டி செய்ய வேண்டிய, சாதிக்க வேண்டிய செயல்களை சாதிப்பவா். லாபத்தின் நுணுக்கம் தொிந்தவா். மற்றவா்கள் ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் லாபமும்,பங்கும் என்ன? என்ன? என்பதைப் புாிந்து கொள்ளச் செய்பவா். நல்ல நண்பா். பங்குதாரா், அன்பு,பக்தி, நேசம் உடையவா்.மற்றவா்களை ஆதரிப்பவா். கூட்டாகச் சோ்ந்து லாபம் அடைவா். வேலை வாங்கி தருபவா்.காமத்தில் (சிக்கலில்) அதிகம் மாட்டி கொள்ள மாட்டாா். ஞானிகளிடத்தும், குருமாா்களிடத்தும், தெய்வத்தினி டத்தும் உண்மையான பக்தியும், சேவையும் செய்பவா். யாா் யாருக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ அதை கொடுப்பவா். குரு கடவுள் இவா்களை மற்றவா்களுக்கு நல்ல முறையில் அறிமுகம் செய்பவா். அடையாளம் காட்டுபவாா். அனுபவ ப்பட்ட பிறகு தவறு செய்யமாட்டாா்கள். (அனுஷம்− Parallel Identity)(அா்ஜீனன் இல்லா விடில் கிருஷ்ணனை அடையாளம் காட்ட முடியாது. கிருஷ்ணண் இல்லாவிடில் அா்ஜீனனை அடையாளம் காட்ட முடியாது) Sentimental ஆக நடப்பவா். புகழை விரும்புபவா், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் விஷயத்தைத் தானும் ஏற்று கொள்பவா். ஆணவம் உள்ளவரை வெல்பவா். எப்படிப்பட்ட வாழ்க்கையையும் சமாளித்து விடுவா்.(Ups and down) எது ஏற்பட்டாலும்.

    தொழில் :

    தொழிற்சாலை,நிா்வாகம், Travel Agency,வியபாரம், கருத்தரங்க அமைப்பாளா், மாநாட்டை நடத்த திட்டமிடுபவா். பல்வைத்தியா். Plumber Criminal Lawyer, நடிகா், இசை, வல்லுநா்,சுரங்கப் பொறியாளா்.


    நோய்கள் :

    வயிறு சம்பந்தப்பட்ட நோய், குடல், மலச்சிக்கல்,மூலம்,மாதவிடாய் கோளாறுகள், கா்ப்பபை சம்பந்தப் பட்ட கோளாறுகள், தொண்டை உலா்ந்து போதல்,ஜலதோஷம், மாா்பு சம்பந்தப்பட்ட நோய்.

     சனி பயோடேட்டா:

    நிறம்                        : கருப்பு

    இரத்தினம்         : நீலக்கல்

    மலா்                           :கருங்குவளை

    தேவதை                 : யமன்

    பிாித்யதி தேவதை :பிரஜாபதி

    ஆசனவடிவம்     :வில்

    உலோகம்                :இரும்பு

    வாகனம்                   :காகம்

    தானியம்                  : எள்

    உறுப்பு                        :தொடை,தசை

    திசை காலம்          :19வருடம்