Monthly Rasi Palangal

  •    > Details
  • KATAKA RASI MATHA PALAN

    கடக ராசி அன்பர்களே!

    காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக் காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும் மூன்றாவது நபர்களின் தலை யீடு காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. அவர்களில் சிலர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும்.

    உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரி களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

    தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

    சாதகமான நாள்கள்: ஜன: 14,17,19,24,28 பிப்: 3,6,8,11

    சந்திராஷ்டமம்: ஜன 31 விடியற்காலை முதல் பிப் 1 காலை முதல் 2 அதிகாலை வரை

    அதிர்ஷ்டஎண்கள்: 5,6

    வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

    பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.