P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
மிதுன ராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் மாதம். அரசாங்கக் காரியங்கள்
தாமதமாகவே முடியும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். எதிலும் வெற்றியே
காண்பீர்கள். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும்.
எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன்
சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியா கும். தாய்வழி உறவினர்கள் வருகையால்
சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகள்
கைகூடும். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உறவினர்களாலும்
நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது
எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால்
அவருடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு
தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற
பலன்கள் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில
பிரச்னைகள் ஏற்பட்டு நீங் கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற
விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாம தம் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி
தருவதாக இருக்கும். அலுவ லகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம்
தரும். எதிர்பார்த்தபடியே சலுகைகள் கிடைக்கும்.
சாதகமான நாள்கள்: ஜன: 14,17,20,,23,25,27 பிப்: 1,4,8,12
சந்திராஷ்டமம்: ஜன 28 இரவு முதல் 29,30,31 விடியற்காலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி
பரிகாரம்: தினமும்
கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு
அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத்
தரும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

