கும்ப ராசி அன்பர்களே!
உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, மே 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!