Weekly Rasi Palangal

  •    > Details
  • MAKARAM RASI VARA PALAN

    மகரராசி அன்பர்களே!

    பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

    அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும்.

    குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28,30

    அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,7

    வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

    பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27  முறை தினமும் பாராயணம் செய்யவும்.

    வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

    பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த

    ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே - அன்பு முன்பு

    செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே