Weekly Rasi Palangal

  •    > Details
  • KATAKA RASI VARA PALAN

    கடகராசி அன்பர்களே!

    பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உஷ்ணத்தின் காரணமாக வயிறுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் - மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

    அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பது தான் எதிர்காலத்துக்கு நல்லது.

    வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28,30

    அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5

    வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

    பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

    நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

    நமச்சிவாயவே நானறி விச்சையும்

    நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே

    நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே