NUMBERS STRENGTH

  •    > Details
  • 8,17,26-பிறந்தவர்கள்

    பிறந்த தேதி-8,17,26பிறந்தவர்கள்

    எண்-8ம் தேதி பிறந்தவர்கள்:

     8-தேதி பிறந்தவர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புவர். பல காரியங்களை சமாளிக்க முயற்சி செய்வார்கள். மதம், பிரசாதனங்கள், தெய்வ வழிபாடு, வேதாந்தம், இவர்களது மனதை பிடித்திழுக்கும். உடலோ சுகத்தை விரும்பும். மனமோ தியாகத்தையும், துறவையும் நினைவுறுத்தும். ஏதாவது பரோபகாரமான  காரியத்தாலோ, தன் சுகத்தை தியாகம் புரிவதிலோ ஈடுபடாவிடில்  மன அமைதி ஏற்படாது. மனசாட்சி அதிகம் வளர்ந்திருப்பதால் நேர்மையான வாழ்க்கை உண்டு. இவர்கள் பெருத்த உழைப்பாளிகள். பல அரிய காரியங்களை சாதிக்க வல்லவர்கள். சமூக நன்மைக்காக பாடுபடுவார்கள். 


    17ந் தேதி பிறப்பவர்கள் :

    பிறவியில் சீமானாக இரா விடினும் எப்படியாவது அந்நிலையை அடைய முயற்சி செய்வார்கள். சரீர சுகங்களை இவர்களது மனம் இடைவிடாமல் நாடும். சதா பெருந்தொகை பணம் சேர்த்துக்கொள்ள திட்டம் போட்டபடி இருப்பார்கள். சுகத்தில் மனம் ஈடுபட்டிருப்பதால் நியாயமான வகையில் பணம் கிடைக்காவிடில், துணிந்து மோசடியான வகைகளில் பணத்தைச் சேர்த்து குவிப்பர். பொதுமக்கள் பணத்தை தன்னுடைய தாக்கிக் கொள்வர். காட்டிக்கொள்ள விரும்பி செலவு செய்தாலும் மனமொப்பி தன் சுகத்துக்காக கூட பணத்தை செலவழிக்க விரும்ப மாட்டார்கள். கஞ்சத்தனம் உடலிலே ஊறிவிடும். கூட்டு எண்  5 அல்லது 9ஆக இருந்தால்  மாத்திரம் மனம் போன படி யோசனையின்றி கூட செலவழிப்பார்கள். இந்த இடைவிடாத முயற்சியையும் எக்கஷ்டம் வரினும் சமாளித்துக் கொண்டு முன்னேறுவதையும், ஆத்மீக வாழ்விலோ அல்லது வாழ்நாளுக்குப் பின்னும் மங்காத புகலிலோ  நாட்டம் கொண்டு உழைப்பதையுங் குறிக்கும்.


    26-ம் தேதி பிறப்பவர்கள் 8,17 தேதிகளில் பிறந்தவர்களை விட துரதிர்ஷ்டசாலிகளை என்று சொல்லலாம். இவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதிலேயே பெற்றோர்களில் ஒருவரையோ,இருவரையோ, இழக்கின்றனர். மிகச் சிலருக்கு தான் 17 வயதுக்கு மேல் கூட தாய் தந்தையர்கள் இருக்கின்றனர். சிறு வயதிலேயே கஷ்டங்களும், முன்னேற்றத்துக்கு தடைகளும் ஏற்பட்டு விடுகின்றன. முன்னேற்றத்தில் விருப்பம் உடையவர்களாதலால் கஷ்டங்களை சகித்துக் கொண்டு  மிகுந்த பிரயாசையுடன் வாழ்க்கையை ஒரு விதமாக ஆரம்பிக்கின்றனர்.பிறரால் வீண் பழிகள் சுமத்தப்படுவதாலும் கஷ்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாலும் சகஜமே. ஏராளமான விரோதிகளை சம்பாதித்துக் கொள்வார்கள். கற்பனா சக்தியும் நகைச்சுவையும் கூர்மையான அறிவும் இவர்களிடம் காணப்படும்.இளம் வயதில் கஷ்டமும், சுகப்பட முடியாத விருத்தாப்பியத்தில் பொருளும் கீர்த்தியும் ஏற்படும். 


     அதிர்ஷ்ட காலம் :1,10,19 தேதிகளும், தேதி,மாதம், வருடம் கூட்டினால் 1 வரும் தினங்களும் அதிர்ஷ்ட நாட்களாகும்.4,13,22,31 தேதிகள் சாதகமான பலன்களைத் தரும். எதிர்பாராத மாறுதல்கள், நிகழ்ச்சிகள்  4 எண்ணின் ஆதிக்கத்தால் ஏற்படும்.9,18,27 தேதிகளும் நன்மை தருவன.


     துரதிஷ்ட தினங்கள் : 8,17,26 தேதிகள் வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி தீமைகளை விளைவிக்கும். பிரயாணம் முதலியவைகளை  இத்தினங்களில் மேற்கொண்டால் நோயும், தோல்வியும், தொடரும். தேதி, மாதம், வருடம்,கூட்டினால்  8 வரும் தினங்களும் நன்மையானதல்ல.


     நிறம் :ஞ்சள் நிறமே இவர்களுக்கு சோபை அளிக்கக் கூடியது. ஆழ்ந்த பச்சையும் நீலமும் நன்மை தரக்கூடியன. தனித்திருக்கும் போது தான் நீல மணி யலாம். மற்றவர்களுடன் பழகும் போது மஞ்சளே உபயோகிக்கவும். கருப்பு, மண்ணிறம் மற்ற மங்கலான ஆழ்ந்த நிறங்கள், சிவப்பு இவைகள் சிறிதும் பொருந்தாது.


     ரத்தினம்: குற்றமற்ற நீலக்கல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ஆறு நூல்கள் உடைய நீலக்கல் இவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை.