NUMBERS STRENGTH

  •    > Details
  • 3,12,21,30- பிறந்தவர்கள்

    3-எண் வியாழன்
    பிறந்ததேதி-03,12,21,30பிறந்தவர்கள்
    3 -ந் தேதி பிறப்பவர்கள் நல்ல சிந்தனை சக்திகள் உடையவர்களாக இருப்பார்கள். தெய்வபக்தியையும் சரீர வளத்தையும், போற்றி  விருத்தி செய்ய வேண்டும்.  உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிடப் பழகிக் கொள்ள வேண்டும்.  கணிதத்தில் இவர்களது மூளையின் பலம் விருத்தியாகும். காவியங்கள், ஓவியங்கள், முதலிய வற்றை ரசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை கௌரவமாகவும் உயர்வாகவும் அமையும். நடு வயதுக்கு மேற்பட்டு புகழ் உண்டாகும்.

    12-ந் தேதியில் பிறப்பவர்கள்  தன்னலம்   கருதாத உழைப்பினாலும், தியாகத்தாலும்  புகழடைவார். வாழ்க்கையே உல கோருக்காகச் செய்யும் தவமாக முடியும். தியாகிக் காண  குணங்க ளெல்லாம் பிறவியிலேயே அமைந்திருக்கும். இள வயதிலேயே கவளையும் பொறுப்பையும்  உணர வேண்டிவர்களாதலால் இத்தேதி யில் பிறப்பவரில் பெரும் பான்மை யர் குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழக்கின்றனர். தாயை மாத்திரம் சிலர் இழப்பதுண்டு. இதன் காரணம் எண்ணின் ஆதிக்கம் குறைந்திருப்பது தான். ஆதிக்கம் இருந்தால் தாய் தந்தையுடன் வாழ்வார். இருந்த போதிலும் தகப்பனுக்கு திரவிய நஷ்டங்கள் ஏற்பட ஏது உண்டு. பிரமிக்கத்தக்க  பிரசங்கியாவார்.

    21-ந் தேதி பிறப்பவர்கள் தீவிரமான சுயநலக்காரராக இருப்பார்கள். தியாகம் செய்துவிட்டு கூலியை எதிர்பார்ப்பார்கள்.  இவர்கள் பத்திரிக்கை  பார்த்தல் அவசியம். உலக அறிவும் அனுபவமும் எவ்வளவுக்கு எவ்வளவு  அதிகப்படுகிறதோ அவ்வளவுக்கு வாழ்க்கை உயர்வடையும். காரியவாதி, செய்தி நிருபர்கள் ஆகவும், உலக அபிப்ராயங்களை  மாற்றி அமைக்க  வல்லவர்களாகவும் ஆகிவிடுவார்கள். அறிவே வெற்றி தரும். கடும் போராட்டங்கள் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும். திட சித்தத்தால் முன்னேறி வெற்றியை பூரணமாக அனுபவிப்பார்.

    30-ந் தேதி பிறப்பவர்கள்  தீர்க்க சிந்தனையும், நுட்பமான மூளையும் உடையவர்கள். கம்பீரமாக வாழ்வதையே விரும்புவர். தன் இஷ்டப்படியே  நடக்கும் தீவிரவாதியாவார்கள். எதையும் கூர்ந்து கவனித்து நுட்பமாய் அறியக்கூடிய புத்திசாலிகள். துப்பறிய கூடிய அளவுக்கு யோசனை சக்தி நேர்த்தியாக இருக்கும். மிகுந்த துணிச்சலும் நெஞ்சலுத்தமும்  உடைய இவர்கள் தோல்வியை கண்டு கலங்க மாட்டார்கள். கலைகளில் சுலபமாக தேர்ச்சி அடையக்கூடிய இவர்கள் தனிமையை ஓரளவு விரும்புவர். இருக்கிற சக்தியை எல்லாம் இப்பிறவிலேயே உபயோகித்து பார்த்து விடுவார்கள்.

     அதிர்ஷ்ட தினங்கள்:3,9,12,18,21,27, 30, தேதிகள் மிக்க நன்மை பயப்பன விவாகம், தொழில் ஆரம்பம்  முதலியன  தேதி,மாதம்,வருடம், மூன்றையும் கூட்டினால் 3, அல்லது 9  எண் வருவதாக உள்ள தினங்களில் செய்தால் பலன் நீடித்திருக்கும்.

    துரதிர்ஸ்ட தினங்கள்:6,15,24  தேதி களில் சில சமயங்களில் சாதகமாக தோன்றி பின்னர் தீமை விளைவிக்கும். இத்தேதிகளில் தடங்கல்களையும், சிரமங்களையும், வாழ்க்கையில் ஏற்படுத்தும். தேதி, மாதம், வருடம், மூன்றையும் கூட்டினாள்  6 வரும் தினங்களில் பெரிய முயற்சிகளை தவிர்க்கவும்.

     அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு ரோஸ் முதலிய எல்லா செந் நிறங்களும்  நன்மை தரும். தாமரைப் பூவின் வர்ணமே மிக்க அதிர்ஷ்டமானதாகும். கத்திரிப்பூ, மஞ்சள், சிகப்பு, நீளம் கலந்த வர்ணங்களும் நன்மை தருவன.

     விளக்க வேண்டிய நிறங்கள் :
     கருநீலம், கருப்பு,ஆழ்ந்த பச்சை.

     இரத்தினம்: மிக்க நன்மைகளைத் தந்து மன அமைதியையும் சற்குண விருத்தியையும் தரவல்லது. எமிதிஸ்ட் எனப்படும் கத்திரிப்பூ நிறம் கொண்ட இக்கல் செவ்ந்தி  என்று அழைக்கப்படும்.
    !!!வாழ்கவளமுடன்!!!