General

  •    > Details
  • 12ராசிக்குறிய மந்திரங்கள்

    12ராசிக்கு உாிய மந்திரங்கள்

    மேஷராசி :

    மேஷராசியில் பிறந்தவா்கள் கீழ்க் கண்ட சுலோகத்தை 27முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அா்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்!


    ஷண்முகம் பாா்வதீ புத்ரம்

    க்ரெளஞ்ச ஸைவ விமர்த்தனம்

    தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்

    வந்தே ஸிவாத் மஜம்


    ரிஷபராசி:

    ரிஷப ராசியில் பிறந்தவா்கள் மகாலட்சுமி பூஜை  செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க்கண்ட சுலோகத்தைத் தினசாி 11முறை, கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.


    ஸ் ரீ  லக்௯ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை  ஸ்வாஹ


    மிதுனராசி:

    மிதுன ராசியில் பிறந்தவா்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசாி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    ஓம் ஜம் க்லீம் ஸோமாய நம:



    கடகராசி:

    கடகராசியில் பிறந்தவா்கள் பவுா் ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ர நாம அா்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.


    ஓம் ஜம் க்லீம் ஸோமாய நம:


    சிம்மராசி :

    சிம்மராசியில் பிறந்தவா்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூாியனு க்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.


    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சூா்யாய நம:


    கன்னிராசி:

    கன்னி ராசியில் பிறந்தவா்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணு வுக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.


    ஓம் ஜம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நம


    துலாராசி :

    துலா ராசியில் பிறந்தவா்கள் மாதம் ஒரு முறை பவுா்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து , கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.


    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் அக்ராய நம:


    விருச்சிக ராசி:

    விருச்சிக ராசியில் பிறந்தவா்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துா்க்கையை பூஜித்து வணங்கி கீழ் கண்ட சுலோகத்தை பாராயணமட செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.


    தரணி கா்ப்ப ஸம்பூதம

    வித்யுத்  காந்தி ஸமப்ரதம்

    குமாரம் சக்தி ஹஸ்தம்ச

    மங்களம் ப்ரணமாம்யஹம்


    தனுசு ராசி:

    தனுசு ராசியில் பிறந்தவா்கள் வியாழக்கிழமை தட்சிணா மூா்த்தி கடவுளுக்கு அா்ச்சனை செய்து கீழ் க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.


    ஓம் ஜம் க்லீம் பிர ஹஸ்பதயே நம:


    மகரராசி :

    மகர ராசியில் பிறந்தவா்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வரபகவானுக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.


    ஓம் ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:


    கும்பராசி:

    கும்ப ராசியில் பிறந்தவா்கள் ஒவ்வொரு வாரமும் பாராயணம் செய்துவந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.


    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம


    மீனராசி :

    மீனராசியில் பிறந்தவா்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவ பெருமானுக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.


    ஓம் க்லீம் ஸ்ரீ  உத்ராய  உத்தாரணே நம:


    !!!வாழ்க வளமுடன்!!!