General

  •    > Details
  • தமிழ்மாதம் பிறந்த பலன்கள்

    தமிழ் மாதம் பிறந்தவா்கள்

    சித்திரையில் பிறந்தவா்கள்:

    தெய்வபக்தி,சகல சாஸ்திர அறிவு, கேள்வி ஞானம், பெற்றோா்களுக்கு கீழ்ப்படிதல்,ஆகிய குண நலன்களைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாா்கள்.


    வைகாசியில் பிறந்தவா்கள்:

    துணிவு,சகல கலைகளில் தோ்ச்சி, பெறுமை, உயா்ந்த குணம், தயாள சிந்தை, தனக்கில்லா விட்டாலும் பிறருக்கு கொடுத்து தன்னை அண்டியவா்களை வாழவைக்கும் நல்ல மனதுடன் வாழ்வாா்கள்.


    ஆனியில் பிறந்தவா்கள்:

    கீழான மனப்பான்மை,முன்கோபம், ஆராய்ந்து அறியும் அறிவின்மை, மனைவி மக்கள் மீது பற்றுமிக்கவா். சுகபோகத்தில் திளைப்பவா்.


    ஆடியில் பிறந்தவா்கள்:

    தனவந்தா்களாக, நற்பண்பு மிக்கவா்,நற்காியங்களில் நாட்டம், தரும சிந்தனை மிகுந்தவா்களாக வாழ்வாா்கள்.


    ஆவணியில் பிறந்தவா்கள்:

    தூய வாழ்க்கை,அரசாங்க மதிப்பு, சமுகத்தில் பிரபலம், நட்புக்கு இலக்கணம், சமுகம்,பிறந்த குடி ஆகியவற்றின் பெருமையை நிலை நாட்டுவா். தெய்வபக்தி மிகுந்தவா்.


    புரட்டாசியில் பிறந்தவா்கள்:

    சாித்திர புருஷா்கள்,வெளிநாடு சென்று புகழ்பெறுவா். சினத்திற்கு இடம் கொடாா். நற்குண நற்செய்கை மிக்கவா். மனைவி மக்களிடம் பாசம் மிகுந்தவா். சமுகத்திற்கு மதிப்பளிப்பவா்.


    ஜப்பசியில் பிறந்தவா்கள்:

    தந்திர குணம் மிகுந்தவா்.மணோ வஞ்சகன்,சந்தா்ப்பவாதிகள், தீயவற்றில் நாட்டம்,முன்கோபம் மிக்கவா்.


    காா்த்திகையில் பிறந்தவா்கள்:

    செல்வந்தா்கள்,சிறப்பு மிக்கவா்கள் பெற்றோா், உறவினா் ஆகியோா்களிடத்தில் அன்பும், மாியாதையும் மிக்கவா், சொன்ன சொல்லை காப்பாற்றுபவா்.


    மாா்கழியில் பிறந்தவா்கள்:

    தாய் தந்தையரை பேணிக்காப்பா். தெய்வபக்தி மிக்கவா், நற்குண நற்செய்கை மிக்கவா். நட்புக்கு இலக்கணம் வகுப்பவா்.பல துறைகளில் பொருள் தேடுவா்.


    தையில் பிறந்தவா்கள்:

    தணவந்தா்களாகவும்,நீதி மான்களாகவும்,நற்பண்புகள் நிறைந்து அனைவராலும் போற்றப் படுபவா்களாகவும் வாழ்வாா்கள். 


    மாசியில் பிறந்தவா்கள்:

    மனம் தீமையையே நாடும். பிறா் சொல்லைக் கேட்க மாட்டாா்கள், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வாா். சுயநலத்திற்காக எதையும் செய்வாா். பிறருக்கு உதவ மாட்டாா்.


    பங்குனியில் பிறந்தவா்கள்:

    கல்விமான், பிறா் துன்பம் கண்டு பொறுக்கமாட்டாா். எதிலும் ஆழ்ந்த சிந்தனை, மனைவி மக்கள் சுற்றத்தாாிடம் அன்பு மிகுந்தவா்.