NAKSHATRA PALANGAL

  •    > Details
  • மகம் நட்சத்திரம்

            மகம் நட்ச்சத்திரம்

    நட்சத்திர பொது பலன்கள்

     படித்தவர், பண்புள்ளவர், எல்லோராலும் மதிக்கப்படும் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஞானமார்க்கமான வேலைகளில் ஈடுபடுவார். ஆக்கபூர்வமானவர், வாழ்க்கையை அனுபவிப்பார்.  கருணை உள்ளம் கொண்டவர்.  தேக வலு உள்ளவர். இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தின் உச்சிக்கு செல்வார்.


     பொதுவான குணங்கள்:

      கடவுளின் மீதும் முன்னோர்கள் மீதும் பக்தி உள்ளவர்கள். கம்பீரமான   தோரணையானவர்,  ஹோமம்,  யாகம்,  யஞ்யம், கும்பாபிஷேகம்,  பிரயாணம்,  செய்பவர்கள்.  கூடுவிட்டு கூடு பாய்வதில் வல்லவர்(  கட்சி விட்டு கட்சி மாறுபவர்)  சாதி விட்டு சாதி, மதம் விட்டு மதம்  திருமணம் செய்பவர்)  வல்லவனும் புல்லும் ஆயுதம் போல்  தன் மூளையைக் கொண்டு எல்லாவற்றையும்  முழுமையாகத் தெரிந்து கொள்வர்  ஆழ்ந்த அறிவு  அதிகம். எந்த ஒரு நுட்பமான அறிவும் இவர்களுக்கு எளிதாக வரும். ஒருவனுடைய உருவம் கண்முன் வருவதற்குள் அவருடைய குணங்கள் முதலில் வந்தால் அது மக நட்சத்திரக்காரர்.  எந்த ஒரு விஷயத்திற்கும் புதிய புதிய உருவகம் தருபவர்.  புயல்,  பூகம்பம்  இவற்றில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து  சமுதாயத்தை காப்பவர்.  அந்தஸ்து, தேஜஸ்,  பொருளாதார மேன்மை  மக்கள் செல்வாக்கு,  இவற்றைப் பெற்ற அரசியல் பிரகாசிப்பவர்.  தன்னைப் பற்றிய சந்தேகம் தனக்கே இருப்பதால்  தனது மதிப்பு ( உயர்வு), திறமை  இரண்டையும்  தன்னை அழித்துக் கொண்டாவது  நிரூபிப்பவர்கள்.  சிறுவயதில்  மிகவும்  குதூகலமாகவும்,  அன்பாகவும்  நடந்து கொள்வார்கள். ( வெளுத்ததெல்லாம் பால், எடுப்பார் கைப்பிள்ளை)


     அடையாளம் :


     பல்லாக்கு-  அரசனுடைய வீடு,  அரசன் பவனி வரும் பல்லாக்கு  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்   ராஜ்ஜிய  அதிகாரம்  பெறுவார்கள் என்பதை குறிக்கிறது.  அரசனுக்கு  பாரம்பரியமாக இருக்கும் வீடு.  அங்கிருந்து தான்  ஆணைகள்  பிறப்பிக்கப்படுகின்றன.  ஏதாவது ஒரு வழியில்  இவர்கள்  பாரம்பரிய  பெருமைகளோடு  சம்பந்தப் படுவார்கள்(+ve(or)-vr)


      முக்கிய குறிக்கோள் :

     பொருள் தேடுதல்,  அர்த்தம்,  பொருளாதார ரீதியாக  தன்னை வளப்படுத்திக் கொள்வதும்,  பலப்படுத்திக் கொள்வதும் ஆகும்.(Self Luminus)


     மிருக அடையாளம் : ஆண் எலி


     அதி தேவதை :  பித்ருக்கள்,  மூதாழையா்கள்.  பாரம்பரியத்தை காப்பாற்றுபவர்கள், ( இதில்  அசுப கிரகம் இருந்தால்  பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள்)


     தொழில்  :

     அரசியல்வாதி,  சட்ட நிபுணர்கள்,  நிறுவனத் தலைவர்கள்,  நடிகர்,  இசை அமைப்பாளர்,  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்,  சுய சம்பாத்தியம் உள்ளவர், மேலாளர்கள்.


     நோய்கள் :

     இதய நோய் - Hyper tension  உயர்ந்த அழுத்தம்,  வயிறு,  அல்சர், குடல் புண்கள்,  தோல் நோய்கள் (Mouth side -Skin Diseases)


     கேதுவின் பயோடேட்டா:

      நிறம்             : சிவப்பு

     ரத்தினம்        : வைடூரியம்

     மலர்                : செவ்வல்லி

     சமித்து            : தர்ப்பை

     சுவை               : புளிப்பு

     உலோகம்       :  துருக்கள்

     வாகனம்         : சிங்கம்

     பிணி               : பித்தம்

     திசை காலங்கள் :07 வருடம்