NAKSHATRA PALANGAL

  •    > Details
  • பூசம் நட்சத்திரம் பொதுபலன்

    பூசம் நட்சத்திரம்
                  பொதுப் பலன்கள்
    படித்தவர், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனதை  வயப்படுத்திக் கொள்வார்.  எல்லோராலும் விரும்பப்படுவார்.  அரசியல் ஆர்வம் உள்ளவர்.  அரசியல் மேதை,  பொருளாதாரம் மேதை, 33  வயதுக்கு மேல் ராஜயோகம் அனுபவிப்பார்.  தன் பாரம்பரியத்தில் யாரும் எட்ட முடியாத சிகரத்தை எட்டுவார்.  தாயுடன் கருத்து வேறுபாடு கொள்வார்.

    நல்ல குணங்கள் :
    உணர்வு பூர்வமான,  உணர்வுகளின் அடிப்படையில் ஒரு கூட்டத்தை கூட்டி அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவர் ஆகுதல்.  கோயில்,  பள்ளி,  சாலை- மற்றவர்களிடம் அன்பு,  மரியாதை,  மதிப்பு,  எதிர்பார்த்தல்,  தன் மூலமாகவே எதையும் நடத்த வேண்டும்.  தன்னை மையமாக வைத்து எதையும் செயல்பட வேண்டும்.  ஒரு தாய்க்குரிய பாசத்துடன்  தன்னைச் சுற்றி உள்ளவர்களை அணுகும்.  பணத்தையும்,   அரவணைப்பையும்,  கொடுத்து தன் முக்கியத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்ளும்.  தெய்வம்சம் நிறைந்த பேச்சு,  பிரார்த்தனை உடையவர்,  அதிர்ஷ்டம்,  மனத் தூய்மை,  நியாயமான வழிபாட்டுச் சடங்குகளை செய்தல்,  இவற்றை உடையவர்.  ஒருவரின் நல்ல முயற்சி,  செயல்,  அடின உழைப்பு,  இவற்றை வளர்த்து விடுதல் இந்த நட்சத்திரத்தின் இயல்பு.   மந்திர பயிற்சி, நல்லது செய்யும் எண்ணம்,  முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,  கடவுள் வழிபாட்டிற்கு அதிகம் செலவு செய்வார்.

    அதி தேவதை :  பிரகாஷ் பதி
    அடையாளம் :
    ஒரு பூ மலர்தல் - inciation  ஒரு வட்டம்,  ஓர் அம்பு(Arrow)  பசுவின் குரல்,  ஜோடி கழுதைகள்,  குரு- உச்சமாக இருக்கும் கடகத்தில்-  பூசம் நடு நட்சத்திரம்.  சுக்கிரன்- உச்சமாக இருக்கும்  மீனத்தில்- உத்திரட்டாதி-  சனியின் நட்சத்திரம் நடு நட்சத்திரம்,  நடு நட்சத்திரம்  பிரகாஸ்பதி - கடவுளை தோற்றுவிப்பார்.  ஒரு பூ மலர்தல்- ஆரம்பம்( விருச்சிகம்)  கட்சி ஆரம்பித்தல்,( கடகம்) தொழில்,  ஆரம்பித்தல். ( விருச்சிகம்)  கலைக்கூடம் ஆரம்பித்தல்( மீனம்)  ஓர் அம்பு-  குறிக்கோளை அடைதல்.  ஜோடி கழுதைகள்- சமுதாயத்தின் ஒட்டுமொத்த சுமைகளை சுமக்கும்.  பூசம்-  ஆன்மீகக் கொள்கைகள் ஆரம்பிக்கும் இடம்.  உணர்வுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இடம்.

    சனியின் பயோடேட்டா:

    இயல்பு :  தேவ கணம்
    முக்கிய குறிக்கோள் :  தர்மம்
    மிருக அடையாளம்: ஆண் ஆடு
    சமித்து   :   வன்னி
    திக்கு      : மேற்கு
    வாகனம் : காகம்
    தானியம் : எல்
    காரகன் :  ஆயுள்
    மலர்       : கருங்குவலை
    ரத்தினம் : நீலக்கல்
    திசை கோலங்கள் : 19 வருடம்
    சேத்திரம்     : திருநள்ளாறு