P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
நட்சத்திர மண்டலத்தில் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரையிலான நட்சத்திரங்கள் சிம்மராசியைச் சேர்ந்தவை. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்கள். தன்னை நம்பியவர்களைக் கைதூக்கிவிடவும் எதிர்த்தவர்களை வாழ்நாள் முழுவதும் புறந்தள்ளவும் செய்பவர்கள். அப்படிப்பட்ட சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.
இதுவரை 9 -ம் இடத்தில் அமர்ந்து பதவி, கௌரவம், பாராட்டு, பணவரவு ஆகியவற்றைத் தந்துவந்த குருபகவான் தற்போது 10 - ம் இடத்துக்குச் சென்று அமர்கிறார். பத்தில் குருவந்தால் பதவியைப் பரிப்பாறே என்கிற கவலையை விடுங்கள்.
வெற்றி வாய்ப்புக தேடி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். தன்னம்பிக்கை குறையும். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் பல நற்பலன்கள் விளையும். இரண்டாம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஏற்கெனவே ஈகோ பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். பணவரவில் இருந்த தடைகள்நீங்கும். பேச்சிலும் கனிவும் முதிர்ச்சியும் தேடிவரும்.
நான்காம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை படுவதால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீட்டில் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை மாற்றிப் புதுவாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.
6 -ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் கடன்களில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். எதிர்களின் தொல்லைகளும் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத்திறன் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25
வரை உங்களின் விரைய ஸ்தானதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதற்றப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்கியம் குறையும். தூக்கம் கெடும். அநாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.
19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளைபாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சகோதரங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
வியாபாரம்
சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யப்பாருங்கள். மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டு பிடித்த பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.
உத்தியோகம்
வேலைச்சுமை ஓரளவு இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். என்றாலும் ஓரளவு உயர்வு உண்டு. கலைஞர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடிப் படைப்புகளை வெளியிடுவீர்கள்.
இந்த குருமாற்றம் உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன் தன் கையே தனக்குதவி என்பதனைப் புரிய வைக்கும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

