மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு தாயாருக்கு மருத்துவச் செலவையும், மனஸ்தாபங்களையும் கொடுத்து உங்களை நாலாபுறமும் பந்தாடிய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். சோம்பல், அலட்சியம் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.இனி குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள்.
கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த பணிகளையும் செய்ய விடாமல் ஒருவித தடுமாற்றத் தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் சமயோஜித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். பணப் பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக்காக கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.