Rahu Kethu

  •    > Details
  • மேஷம்(ராகு−கேது)பெயா்ச்சி

    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். ராகுவால் உங்களுக்கு விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். தம்பதிக்குள் நடந்துவந்த நிழல் யுத்தம் நீங்கி நல்லுறவு தொடரும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் தீரும்.

    கேதுவின் பலன்கள்இதுவரை உங்கள் ராசியில் 7ஆம் இடத்தில் கேது இருந்துகொண்டு எந்த வேலையையும் முடிக்க முடியாத சூழலை தந்தார். கேது இனி ஆறாம் வீட்டுக்கு வருகிறார். அடுக்கடுக்காய் விபரீத ராஜ யோகங்களை உருவாக்குவார். விநாயகர் வழிபாட்டில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். வேதங்கள் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்