TITHIPALANGAL

  •    > Details
  • பஞ்சமி திதி

    திதிகள்
    திதி என்பது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.  அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.  அதன் பின் சந்திரன்  சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது   பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின்  தமிழ் நாட்காட்டியின் படி  ஒவ்வொரு மாதமும் 30    திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன.  அவை  கிருஷ்ண பட்சம்  அல்லது தேய்பிறை  மற்றும்  சுக்குலபட்சம்  அல்லது வளர்பிறை ஆகும்.

    பஞ்சமி தியில் பிறந்தவா்கள்
    பலன்கள்:
      பஞ்சமியில் பிறந்தவா்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணு பவா்களாகவும், நுட்ப தேகமுடையவா்க ளாகவும், மண்ணாசை கொண்டவா்க ளாகவும்,இருப்பாா்கள்.

    பஞ்சமி திதி  எல்லா சுப காரியங்களை யும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்படுகிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷபயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவாா்கள்.
    எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாகதோஷம் உள்ளவா்கள் இந்தத் திதியில் நாகபிரதிஷ்டை செய்து வேண்டி ஔவழிபட , நாக தோஷங்கள் விலகுமக. நாக பஞ்சமி விசேஷமானது.

      திதிகளில்  வளர்பிறை  துவிதியை,  பஞ்சமி, சப்தமி,   தசமி, ஏகாதசி,  துவாதசி,  திரையோதசி,  ஆகியவை விசேஷமானவை.
    தேய்பிறையில்  துவிதியை,  திருதியை,  பஞ்சமி,  மூன்றும்  சிறப்பான  சுப திரிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.