KARANAPALANGAL

  •    > Details
  • சகுனி கரண பலன்

    சகுனி கரணம்
    அன்னம் போல் அழகாய் நடக்கும் சகுனி காரணத்தில் பெரும் கவுரவம் மிக்க பணக்காரன். புத்திசாலி, மக்கள் பலமிக்கவர், தானிய சம்பத்துக்கள் கொண்டவன், மந்தம், முன்கோபம்,  பிரச்சனை இருக்கும் இடத்தில் தீர்வு கொடுப்பார். இவர்களின் பறவை சனியின் வாகனம் காகம்.

    இவர்களுக்கு சனி கிரகம் துணை நிற்கும்.  கருப்பு நிறம் கொண்டவர்.  இவர்கள் உழைப்புக்கு ஏற்ப உயிர்வார்கள். கூட்டுத் தொழில், இறைச்சிக்கடை, வாரம் தூக்குதல்,  சர்வர்,  சலூன், என்னை வியாபாரம்,  இரும்பு வியாபாரம்,  கட்டடம் கட்டுபவராக இருப்பார்கள்,  விவசாயம்,  தொண்டு நிறுவனம்,  மர வேலை,  மண்பாண்ட தொழில்,  சொந்த பந்தங்களோடு உழைக்க விரும்புவார்.

    வழிபட வேண்டிய தெய்வங்கள்& பரிகாரங்கள்:
    திருநள்ளாறு சனீஸ்வர வழிபாடு அவசியம். காகத்திற்கு உணவு,  ஏழை மற்றும் உடல் ஊனமிக்கவருக்கு உதவுதல் நன்று.