KARANAPALANGAL

  •    > Details
  • கரசை கரணம் பலன்

    கரசை கரணம்
    கரசை கரணத்தில் பிறந்தவர்கள் விலை மகள் மீது மோகம், அரசரால் அதிக ஆதாயம் பெறுவான்.  தன் விரோதிகளை தோற்கடித்து துன்பற வைக்கும் ஆற்றல் கொண்டவர்,  நிலம் வாங்குவது, விவசாயம் செய்வது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம் செய்வது நன்று.

    இந்தக் கரணத்தின் கரணதன் சந்திரன் ஆவார். இவர்களுக்கு வேத வித்துவான், பொருளாதார நிபுணர்கள்,  வங்கி மேலாளர்,  வாக்குப்பழிதம்,  ஜோதிட வித்வான்,  குழந்தை மருத்துவர்,  டெஸ்ட் டியூப்,  புதிய மருத்துவச் சிகிச்சை  துறையில் இருப்பார்கள். நீதித்துறை,  கோவில் தர்மகர்த்தா,  மத தொடர்பு கொண்ட அனைத்து துறைகளில் இருப்பார்கள்.
    கரசை கரணம் பலம் முக்கியம்.

    வழிபட வேண்டிய தெய்வங்கள் & பரிகாரங்கள்:
    பிள்ளையார்பட்டி, திருப்பதி, இந்திரன்,  விநாயகர் வழிபாடு,  யானைக்கு உணவு வழங்குவது,  அவற்றிடம் ஆசீர்வாதம் வாங்குவது,  குழந்தைகளுக்கு யானை பொம்மை வாங்கி தருவது நன்று.