பரணி நட்சத்திர பொது பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாரபட்சமற்ற அன்பு செலுத்துதல், பொறுமை உள்ளவர் எதையும் தாங்கும் இதயம். அந்தஸ்த்து உள்ளவர். தொண்டு உள்ளம் கொண்டவர். வாழ்க்கைத் துணையிடம் மிகவும் அன்பானவர். என்ன சிரமப்பட்டாவது தனக்கு கொடுத்த பணியை முடித்து உயர் பதவியை( அல்லது) வெற்றியை அடைவார். மனத்துணிவும், செயல் ஊக்கமும், செல்வாக்கும் உள்ள ஒரு சரியான துணைவர் எப்போதும் இருக்க வேண்டும். மந்திர ஆலோசனையில் பங்கு கொள்ளும் தகுதி உடையவர். எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார். மறுப்பு ஏதும் சொல்லாதவர் அரசியல், பணப்புழக்கம், திட்டமிட்டு செயல்படுதல், அதிகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். வாலிபத்தில் சுகாதாரமான உடலும்,(HEALTHYBODY) வயோதகத்தில் வசதியான வாழ்வும், இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
இவர்களுடைய கெட்ட குணங்கள்:-
இவர்கள் செலுத்தும் அன்புக்கு பிரிதிவழிப்பு இல்லை என்றால் ஆக்ரோஷம் அடைவார்கள். இவர்கள் செலுத்தும் அன்புக்கு கைமாறு இல்லை எனில் வேறு ஒருவரை நாடுவார். உடல் ரீதியாக மனோ ரீதியாக ஏமாற்றமோ அவமானமோ ஏற்பட்டால் பழி தீர்க்கும் வஞ்சம் தீர்க்கும் குணம் உள்ளவர். தேக திருப்தி இல்லாவிட்டால் சந்தோசமாக இவர்களால் எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. ராகு, கேது, சனி, செவ்வாய் பரணியில் இருந்தால் தேக சுகம் கிடைக்காது. பரணியில் தசை நடத்தும் கிரகம் இருந்து மேஷம்6,8,12 வீடாக இருந்தால் செயலாற்றலில் தடுமாற்றமும், வாழ்க்கையில் கஷ்டங்களும் ஏற்படும். பரணியில் விருப்பத்தை நிறைவேற்றினால் கருத்து, திட்டங்கள், சுகங்கள் நிறைவேற்றினால் அருகிலுள்ள 100 பேரை காப்பாற்றும்.
தொழில் ஈடுபாடு:-
பதிப்பகம், எழுத்தாளர், சினிமா, இசை, ஆன்மீக உணர்வு, மனநல வல்லுநர், ஜோதிடர்கள். தொழில் முனைவோர், வியாபாரி, வக்கீல், பில்டிங் காண்ட்ராக்டர்.
இவர்களின் நோய்:-
ஜனன உறுப்புக்களில் நோய், பாலியல் நோய், முகம், கண்பார்வையில் சிக்கல், தலையில் காயம் ஏற்படுதல்.
மாற்று வழிகள்:-
பரணியில் பிறந்தவர்களை பாராட்ட வேண்டும். அது கேட்பதை மறுத்தால் அங்கு டெவலப்மெண்ட் இருக்காது. பரணி ஒரே நேரத்தில் 100 பேரை வசீகரிக்கும். ஒரு காரியத்தை முடிக்க பரணி கையில் கொடுக்க வேண்டும்.
பரணியின் பயோடேட்டா:−
ஆழும் உறுப்புகள்:தலை,மூளை,கண் பகுதி.
நிறம்:வெண்மை
இருப்பிடம்:கிராமம்
கணம்:மணிதகணம்
குணம்−உக்கிரம்
பறவை:காக்கை
மரம்:பாலில்லாத நெல்லி
மலா்:கருங்குவளை
நாடி:மத்திமநாடி
ஆகுதி:தேன்,எள்
பஞ்சபூதம்:பூமி
நைவேத்யம்:வெல்ல அப்பம்
தெய்வம்:துா்க்கையம்மன்
எழுத்துக்கள்:லீ,லு,லே,லோஅதிா்ஷ்டம் தருபவை:−
அதிா்ஷ்ட என்கள்:2,6,9
அதிா்ஷ்ட நிறம் −ரோஸ்,வெள்ளை
அதிா்ஷ்டதிசை:தென்கிழக்கு
அதிா்ஷ்ட கிழமை:செவ்வாய்,வெள்ளி
அதிா்ஷ்டரத்தினம்:வைரம்
அதிா்ஷ்டஉலோகம்:வெள்ளி